சூப்பரோ சூப்பர்.. மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்! என்ன தெரியுமா?
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.? அதிர்ச்சி தகவல்.!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உச்சத்தை தொட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் இதுவரை 64,71,665 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 54,24,901 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளார்கள். கொரோனவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 768 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.