இந்தியா Covid-19

இரண்டாவது அலையாக பரவும் கொரோனா.! மீண்டும் ஊரடங்கா.?

Summary:

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவில் இருந்து மீண்ட பல நாடுகளில் தற்போது இரண்டாவது அலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

பல நாடுகளில் மீண்டும் கொரோனா தீவிரமாக அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளது. இதனால், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவும் வேகமும் அதிகரித்துள்ளது.

இதனால் பிரான்ஸ் நாட்டில் புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகள் அறிவிப்பது குறித்து அந்நாட்டு அதிபர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தநிலையில், பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கு உத்தரவு வரும் சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்குகிறது. ஊரடங்கு உத்தரவு பகுதிகளில் மக்கள் வேலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது.


Advertisement