மருத்துவம் Covid-19

மீண்டும் கொரோனா பரவல் உச்சம்.! துணை ராணுவ மருத்துவ குழு டெல்லிக்கு வரவழைப்பு.!

Summary:

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் துணை ராணுவத்தை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் டெல்லி வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதல் பெரும் பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் டெல்லி முதல் இடத்தில இருந்துவந்தது. தற்போது அங்கு கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கிறது என்ற தகவலும் வெளியானது. டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளதால், டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு என்ற தகவல் பரவத் தொடங்கியது.

இந்தநிலையில் டெல்லியில் மீண்டும்  ஊரடங்கை  அமல்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. சிறந்த மருத்துவமனை மேலாண்மை மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளே தீர்வுகளாக இருக்க முடியும் என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.

தற்போது டெல்லியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இதனால் அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக துணை ராணுவத்தை சேர்ந்த 45 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் டெல்லி வரவழைக்கப்பட்டு உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
 


Advertisement