காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முக்கிய புள்ளி பாஜகவில் இணைந்தார்! பாஜகவுக்கு வந்ததும் அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

Congress person joined in bjp


congress-person-joined-in-bjp

காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விலகிய நிலையில் நேற்றையதினம் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் பலரும் எதிர்பார்த்த, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மூத்த தலைவர் கமல்நாத் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் மோடி, அமித்ஷாவை சந்தித்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, நேற்று மதியம், டெல்லியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று, கட்சி தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் 3 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்காக வரும் 26-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தலா ஒரு இடத்தில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை இருக்கும் நிலையில், பாரதீய ஜனதா தனது வேட்பாளராக ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை அறிவித்துள்ளது. எனவே அவர் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்.