இந்தியா

பல கிலோமீட்டர் நடந்து சென்றதால் கால் வெந்து வெடித்திருக்கும் குழந்தைகள்.! இவர்கள் வடமாநில குழந்தைகளா.? Fact Check

Summary:

Congress leader shares photo from Pakistan to criticize lock down

கடந்த சில நாட்களாக வடமாநிலத்தை சேர்ந்த சில குழந்தைகள் ஊரடங்கு உத்தரவால் நடந்தே சென்றதில் அவர்களின் கால் பாதம் வெடித்து பார்ப்பதற்கே மிகவும் கஷ்டமாக இருப்பதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த குழந்தைகள் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உடனே போக்குவரத்துக்கு வசதிகளும் நிறுத்தப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களை சேர்ந்த சில தொழிலார்கள் தங்கள் பிள்ளைகளுடன் உடமைகளை சுமந்துகொண்டு 500 , 600 கிலோமீட்டர் என பல இடங்களில் நடைபயணம் மேற்கொண்டோனர்.

இந்நிலையில், இதுபோன்று நடந்துசென்ற குழந்தைகளின் கால் பாதம் வெடித்துள்ளதாகவும், அந்த குழந்தைகள் கால்களைக் காட்டிக் கொண்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், உன்மையில் அந்த புகைப்படம் இந்தியாவை சேர்ந்த வடமாநில குழந்தைகள் இல்லை என்றும், அவர்கள் நடந்து சென்றதால் இதுபோன்று ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த குழைந்தைகள்.

2018-ம் ஆண்டு குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை வலியுறுத்தும் வகையில் அந்த குழந்தைகளின் சோகமான கால்களுடன் வெளியான செய்தி ஒன்றில் அந்தப்புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement