இந்தியா

அடுத்தடுத்தாக தாய், தந்தையை இழந்து தவித்த சிறுவன்! மனநலம் பாதிக்கப்பட்ட அக்காவிற்காக எடுத்த வேதனையான முடிவு!

Summary:

child stop his study for his mentally challenged sister

மைசூர் மாவட்டம் ஆலனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்  குமார். இவரது மனைவி மஞ்சுளா.இவர்களுக்கு அனுஷா என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். அனுஷா மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார். மேலும் ஆகாஷ் அப்பகுதியில் உள்ள டி.எஸ்.அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு , குமாரும் அவரது மனைவி மஞ்சுளாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில் தாய், தந்தையை இழந்து அனுஷாவும், ஆகாசும் ஆதரவற்று தவித்துள்ளனர்.

மேலும் தான் பள்ளிக்கு சென்றால், தனது அக்காவை கவனிக்க முடியாதோ என எண்ணிய ஆகாஷ், அனுஷாவிற்கு பள்ளிபடிப்பை திடீரென்று பாதியில் நிறுத்தினான். இதுகுறித்து தாசில்தார் மஞ்சுநாத்திற்கு தகவல் தெரியவந்த நிலையில், அவர் ஆலனஹள்ளி கிராமத்திற்கு சென்று, ஆகாஷை சந்தித்து பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியது குறித்து விசாரித்துள்ளார். அப்போது அவர் தனது மாநிலம் பாதிக்கபட்ட அக்காவை கவனிக்க ஆள் இல்லை எனவும்,அதற்காக  பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளான்.

school study in tamilnaduக்கான பட முடிவுகள்

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மஞ்சுநாத், அனுஷாவை கருணாலயத்தில் சேர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஆகாஷ் மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். மேலும் அரசு சார்பில் ஆகாஷ் மற்றும் அனுஷாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ஆகாஷ் கேத்தனஹள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தாசில்தார் மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.


Advertisement