கடன் தொல்லையால் கொடூரம்.. கணவரின் ஏச்சு, பேச்சால் பெண் விஷம் குடித்து தற்கொலை.!

கடன் தொல்லையால் கொடூரம்.. கணவரின் ஏச்சு, பேச்சால் பெண் விஷம் குடித்து தற்கொலை.!


Chennai Thirunindravur Loan Torture Woman Suicide Death

சென்னையில் உள்ள ஆவடி, திருநின்றவூர் ராமர் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஜெயப்ரகாஷ். இவரின் மனைவி பவானி (வயது 35). இப்பகுதியை சார்ந்த விஜயலட்சுமி (வயது 45) என்பவரிடம், பவானி கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.2 இலட்சம் கடன் வாங்கியுள்ளார். 

இந்த பணத்திற்கு வட்டியும் கொடுக்காமல், அசலையும் அடைக்காமல் இருக்கவே, பவானி வீட்டிற்கு அவ்வப்போது விஜயலட்சுமி என்று கடனை கேட்டுள்ளார். கடந்த 6 மாத்திற்கு முன்னதாக பவானி கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதியில் பவானியின் வீட்டிற்கு விஜயலட்சுமி சென்று பணம்கேட்ட நிலையில், பவானியை கணவர் ஜெயபிரகாஷ் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளாகிய பவானி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு போராடியுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவகாந்தி மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பவானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருநின்றவூர் காவல் துறையினர், விசாரணை நடத்தி தற்கொலைக்கு பவானியை தூண்டிய வழக்கில் விஜயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.