#வீடியோ: ஓட்டப்போட்டியில் தவறி விழுந்த மத்திய அமைச்சரின் ஆதரவாளர்.. அமைச்சர் செய்த காரியம்..!

#வீடியோ: ஓட்டப்போட்டியில் தவறி விழுந்த மத்திய அமைச்சரின் ஆதரவாளர்.. அமைச்சர் செய்த காரியம்..!


central-minister-scindia-supporter-business-man-felt-do

கிரிக்கெட் மைதானத்தில் மத்திய அமைச்சருடன் ஓடிக்கொண்டு இருந்த ஆதரவாளர் திடீரென கீழே விழுந்த நிலையில், அமைச்சர் அதனை கொண்டுகொள்ளாமல் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர், சங்கர்பூர் பகுதியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்திற்கு இன்று ஆய்வு செய்வதற்காக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிரடிய சிந்தியா வந்திருந்தார். 

அவர், மைதானத்தில் தடைகள்போட்டி நடத்துவது போல, ஓடிக்கொண்டு மைதானத்தை சோதனை செய்தார். இதன்போது, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவருடன் வந்தவர்கள் என பலரும் அவருடன் ஓடிவந்தனர். 

இந்நிலையில், மத்திய அமைச்சர் சிந்தியாவின் ஆதரவாளர் ஒருவர், அவரை முந்திச்செல்ல நினைத்த போது தவறி விழுந்துள்ளார். அவருடன் ஓடிக்கொண்டு இருந்த மத்திய அமைச்சர், சற்று பாதுகாப்பாக விலகி தனது ஓட்டத்தை தொடர்ந்தார். அருகில் இருந்த பலரும் அதனை கண்டு சிரித்துள்ளது வீடியோவின் சிரிப்பு சத்தத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், எதிர்மறையான இருதரப்பு கருத்துக்களை பெற்று வருகிறது. மேலும், தங்களின் ஆதரவாளர் கீழே விழுந்தால் இப்படித்தான் ஓடிக்கொண்டே இருப்பீர்களா? உதவி செய்யமாட்டீர்களா? என கருத்துக்கள் பதிவிடப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. 

விழுந்த மத்திய அமைச்சரின் ஆதரவாளர் பிரபல தொழிலதிபர் சஞ்சய் சர்மா என்பதும் குறிப்பிடத்தக்கது.