வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
மத்திய ஆயுதப்படையில் காலியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு; யூபிஸ்சி அறிவிப்பு.!
மத்திய ஆயுதப் படையில் காலியாக உள்ள 398 பணியிடங்களை நிரப்புதல் தொடர்பான முக்கிய அறிவிப்பை யூ.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் upsc.nic.in. இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் காவல் படை, இந்தோ – திபெத் எல்லை காவலர்கள், எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காவலர்கள் பணிக்கான தேர்வுகளை யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மொத்தம் 398 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதிகள் , விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்ய கடைசி நாள் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
CPRF – 179 , BSF – 60 , ITBP – 46 , CISF – 84 , SSB – 29 என மொத்தம் 398 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய கடைசி நாள் – ஜனவரி 28 , தேர்வு நாள் – ஆகஸ்ட் 12
வயது வரம்பு: விண்ணப்பிப்பவர்கள் 20 லிருந்து 25 வயது வரை இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். யூ.பி.எஸ்.சி இணைய தளத்திற்கு சென்று ஜனவரி 28ம் தேதிக்குள் தங்களின் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://upsconline.nic.in/daf/daf_capf_2018/