கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
சாதிய கொடுமை; தனியாக தட்டு, டம்ளர் கொடுத்து, நிற்க வைத்து டிவி பார்க்க சொன்னதால்...இளம் பெண் தற்கொலை...!

கேரளாவில் சாதி பாகுபாடு, வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் திருச்சூரில் உள்ள குன்னம் பகுதியை சேர்ந்தவர் சுமேஷ். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு கடந்த 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது. இதில் சங்கீதா தலித் பிரவே சேர்ந்தவர். சுமேஷ் பிரிவை சேர்ந்தவர்.
இந்நிலையில் திருமணம் முடிந்த இரண்டு வாரத்தில் கொச்சியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்த கொடுமை ஆரம்பித்துள்ளது. சாதிய பாகுபாடு பார்த்து, சங்கீதா பயன்படுத்த தனியான தட்டு, டம்ளர் கொடுத்துள்ளனர். மேலும் சங்கீதாவின் பெற்றோர் வரதட்சனை கொடுக்காததால், சங்கீதா தொலைக்காட்சியை நிகழ்ச்சியை பார்க்க நாற்காலியில் அமரக்கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் சுமேஷ் அவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
சங்கீதாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், சாதி பாகுபாடு பேசி வந்ததாகவும், அதனால் சங்கீதா இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்,என எர்ணாகுளம் போலீசார் கூறுகின்றனர். இதை தொடர்ந்து, தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர், அவரது தாயார் ரமணி மற்றும் சுமேஷின் உறவினரான மனிஷா என்ற பெண், உட்பட மூன்று பேரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.