தரைப்பாலத்தை கடக்க முயன்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கார்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப பலி..!car fall into a river in maharashtra

தரைபாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6பேர் கலந்துகொண்டு, பீட்டல் மாவட்டத்திற்கு ஸ்கார்பியோ காரில் திரும்பியுள்ளனர். அப்போது கேல்வாட் என்ற இடத்தில் தரைபாலத்தை கடக்க முயன்ற கார் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது.

maharashtra

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் ஆறு பேர் இருந்த நிலையில், 3பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள  3பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.