விறுவிறுப்பாக துவங்கியது15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு!

விறுவிறுப்பாக துவங்கியது15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு!


By election started in karnataka

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் 14 மாதங்களே நீடித்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது. 

எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

vote

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தநிலையில் வாக்காளர்கள் ஆர்வமுடன் காலையிலேயே வரிசையில் வந்து நின்று வாக்களித்து விட்டு செல்கின்றனர்.