புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கொரோனோவை கட்டுப்படுத்த பேருந்துகளில் அதிரடியான மாற்றங்கள்! அசத்தலான ஆந்திராவின் முயற்சி!
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவிவருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஊரடங்கு மே 17ஆம் தேதி முடிவுக்கு வரும் நிலையில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கட்டுப்பாடுகளுடன் பல பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாநில போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளை பாதுகாப்புடன் சமூக இடைவெளியை பின்பற்றி இயக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் ஆந்திர அரசும் பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. அதில் முதல்கட்டமாக ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகம் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பேருந்துகளில் உள்ள இருக்கைகளை மூன்று வரிசைகள் கொண்டதாகவும், ஒரு சீட்டிற்கும் மற்றொரு சீட்டிற்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்கும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனோவை கட்டுப்படுத்த, இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், சகஜமான நிலைக்கு திரும்பிய பிறகு மீண்டும் இருக்கைகள் பழையபடி மாற்றி அமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்