ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற பேருந்து நடத்துநர்! குவிந்துவரும் பாராட்டுக்கள்!

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற பேருந்து நடத்துநர்! குவிந்துவரும் பாராட்டுக்கள்!



bus-conductor-passed-ias-exam

பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் (பிஎம்டிசி) பேருந்து நடத்துனர் மது  கடந்த ஆண்டு ஜூன் மாதம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) தேர்வில் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த 29 வயதான மது, பேருந்தில் நடத்துனராக பணிபுரிவது மட்டுமல்லாமல். பணிநேரம் முடிந்ததும் தேர்வுக்காக தன்னை தயார் படுத்தியுள்ளார். இவர்தான் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார். 

மது பணிநேரம் போக வீட்டில் படித்திக்கொண்டிருக்கும்பொழுது, அவர் ஐஏஎஸ் தேர்வுக்குத்தான் பிடித்துக்கொண்டிருக்கிறார் என்பது கூட அவரது குடும்பத்தினருக்கு தெரியாமல் இருந்துள்ளது. அவரது கடும் முயற்சியால் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அடுத்ததாக நடக்கவிருக்கும் நேர்முகத்தேர்வில் மது வெற்றி அடைவார் என பலரும்  எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் மதுவிற்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.