பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி வீடு புல்டோசர் மூலம் இடிப்பு...!!

பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி வீடு புல்டோசர் மூலம் இடிப்பு...!!


Bulldozer demolishes house of BJP leader who urinated on tribal worker...

மத்திய பிரதேச மாநிலத்தில்  பழங்குடியின ஒப்பந்தத் தொழிலாளி மீது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர் பழங்குடியின ஒப்பந்த தொழிலாளி மீது சிறுநீர் கழித்துள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் பாஜக நிர்வாகி மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கக்கோரி பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் பிரவேஷ் சுக்லா வின் வீட்டை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டியதாக கூறி மாவட்ட நிர்வாகம் புல்டோசர் வைத்து இடித்து தள்ளியது.