இந்தியா Budget2019

இனி மக்கள் கையில் பணம் அதிகம் புரளும்! பட்ஜெட்டில் நிதியமைச்சர் பலே திட்டம்

Summary:

Bulk amount capitalised in psu banks

இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

பின்னர் 11:30 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை துவங்கினார் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம், விவசாயத் துறையில் தனியார் நிறுவனங்களின் முதலீடு, புதிய தேசிய கல்விக் கொள்கை என தனது உரையை ஆரம்பித்தார்.

மேலும் பிரதான் மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான் திட்டத்தின் கீழ் "பாரத் நெட்" என்ற பெயரில் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் தடையில்லா இணைய வசதி ஏற்படுத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வங்கிகள் நிறைய கடன் கொடுக்க வேண்டும். எனவே இந்த நிதி ஆண்டில் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி வரை மூலதன நிதியாக வழங்கும் என்றும் இந்த தொகை வங்கிகளுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மக்கள் கந்து வட்டிகாரர்களை மட்டும் நம்பியில்லாமல் முறையாக வங்கிகளில் குறைந்த வட்டியில் அதிகம் கடன் பெற வாய்ப்புகள் ஏற்படும்.


Advertisement