#வீடியோ: எரும மாட்டுக்கு எவ்வளவு அறிவு!! இந்த எருமை மாடு செய்யும் காரியத்தை பாருங்க!! வைரல் வீடியோ..Buffalos drinking water viral video

எருமை மாடு ஒன்று அடிபம்பை அடித்து தண்ணீர் குடிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Dipanshu Kabra என்ற IPS அதிகாரி இந்த வீடியோ காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 35 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ காட்சியில், எருமை கூட்டம் ஒன்று சாலை ஓரமாக வந்துகொண்டிருக்கும்போது, சாலை ஓரத்தில் இருந்த அடிபம்பு ஒன்றை கவனிக்கிறது.

Viral videos

உடனே அந்த கூட்டத்தில் இருக்கும் எருமை ஒன்று, அடிபம்பை தனது கொம்பினால் மேலும் கீழுமாக இழுத்து, அந்த பம்பில் தண்ணீர் வரைவைத்து குடிக்கிறது. பொதுவாக அறிவு கெட்ட எரும மாடு என பலர் திட்டி நாம் பார்த்திருப்போம். ஆனால் மிகவும் அறிவு பூர்வமாக நடந்துகொள்ளும் இந்த எருமை மாட்டை பார்க்கும்போது, இனி அறிவுகெட்ட எரும-னு யாரும் திட்டாதீங்க.