ஜம்முவில் ஊடுவுற 135 பயங்கரவாதிகள் தயார் நிலை - எல்லையை அலர்ட் செய்த ஐ.ஜி.!

ஜம்முவில் ஊடுவுற 135 பயங்கரவாதிகள் தயார் நிலை - எல்லையை அலர்ட் செய்த ஐ.ஜி.!


BSF IG Pressmeet Kashmir

பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் காஷ்மீருக்குள் நுழைவதற்காக 135 பயங்கரவாதிகள் காத்துகொண்டு இருக்கின்றனர் என காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி ராஜா பாபு சிங் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி ராஜா பாபு சிங், "இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், எல்லையில் பொதுவான அமைதி நிலவி வருகிறது. அவ்வப்போது பாகிஸ்தான் அத்துமீறியும் வருகிறது. முந்தைய வருடங்களை பார்க்கும் போது, தற்போது எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவது குறைந்துள்ளது.

கடந்த 2019 ஆம் வருடம் 130 பேர் எல்லை வழியாக ஊடுருவி இருந்தனர். 2020 ஆம் வருடம் 36 பேர் மட்டுமே ஊடுருவினர். கடந்த 2021 ஆம் வருடத்தில் 31 பேர் மட்டுமே எல்லைதாண்டி வந்துள்ளனர். 58 ஊடுருவல் முயற்சியில், 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 21 பேர் திரும்பி ஓடிவிட்டனர். ஒருவர் சரணடைந்துள்ளார்.

Bsf

இவர்களிடம் இருந்து 3 ஏ.கே 47 துப்பாக்கி, 6 கைத்துப்பாக்கி, 1,071 வெடிபொருள், 20 கையெறிகுண்டு, ரூ.88 கோடி மதிப்புள்ள ஹெராயின் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. நடப்பு வருடத்தில் 135 பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இராணுவம் - எல்லை பாதுகாப்பு படை இடையே நல்ல ஒத்துழைப்பு இருப்பதால், பயங்கரவாதிகள் ஊடுருவல் தவிர்க்கப்டுகிறது" என்று தெரிவித்தார்.