செல்போன் திருடிய இளைஞரை ரயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்!.. காட்டிக் கொடுத்த வீடியோ...!!

செல்போன் திருடிய இளைஞரை ரயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்!.. காட்டிக் கொடுத்த வீடியோ...!!


brutality of throwing the youth from the train who stole the cell phone

ஓடும் ரயிலில் பெண்ணிடமிருந்து செல்போன்  திருடிய இளைஞரை, பயணிகள் அடித்து உதைத்து, ரயிலில் இருந்து வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுடெல்லி டெல்லிலிருந்து அயோத்தியா சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த பெண்ணிடம் இருந்து இளைஞர் ஒருவர், செல்போனை போனை திருடியுள்ளார். தனது செல்போன் காணாமல் போனதாக அந்த பெண் கூறியதை தொடர்ந்து, சக பயணிகள் அங்கிருந்தவர்கள் அதனை தேடியுள்ளனர். 

அப்போது, ஒரு இளைஞரிடம் அந்த செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த பயணிகள் இளைஞரை அடித்து உதைத்து இழுத்துச் சென்று ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில், தில்கார் ரயில் நிலையம் அருகில், ரயில் கம்பத்தில் அந்த இளைஞரின் தலை மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இது தொடர்பாக, இளைஞரை ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிய நரேந்திர துபே என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த இளைஞரை அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவர் கெஞ்சி கேட்டும் ரயிலிருந்து அவரை கீழே தள்ளும் விடியோவை ஆதாரமாக வைத்து குற்றவாளி நரேந்திர துபே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.