திருமணம் முடிந்த 16 நாளில்.. சடலமாக கரையொதுங்கிய புதுமணப்பெண்.. மணமகன் வீட்டில் நடந்த அந்த கொடுமை.!
புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் உறவினர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இளம்பெண்:
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரெய்லி மாவட்டம், பிஷாரட்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ரீதேவி (வயது 21). இவருக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்பு, அங்குள்ள படவுன் மாவட்டத்தைச் சேர்ந்த நபருடன் திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: தாலி ஈரம் காய்வதற்குள் புதுமணப்பெண் விபரீதம்.. மாப்பிள்ளை வீட்டில் நடந்தது என்ன? தஞ்சாவூரில் திடுக்.!
வரதட்சணை:
திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையும் கொடுக்கப்பட்ட நிலையில், திருமணத்துக்குப்பின் மணமகன் வீட்டில் இருந்த பெண்ணை, திருமணம் முடிந்த 16வது நாளில் கூடுதல் வரதட்சணை கேட்டு திரும்ப அனுப்பி வைத்துள்ளனர்.

மாயம்:
மேலும், பெண் வீட்டில் இருந்த ஒவ்வொரு நாளும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாயின் வீட்டுக்கு வந்த பெண் திடீரென மாயமாமனார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தற்கொலை:
இதனால் பதறிப்போன உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பெண் மறுநாள் அங்குள்ள ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக ஸ்ரீதேவியின் தந்தை நேத்ராபால் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஐடி ஊழியரை ஏமாற்றிய இளைஞர்.. ஸ்கெட்ச் போட்ட பெண்.. உள்ளே தூக்கி வைத்த காவல்துறை.!