திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்...பின் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்...பின் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்.!


bride-fell-from-the-roof-a-few-hours-before-the-wedding

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவதேஷ் என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று திருமணம் நடைப்பெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் அலங்காரங்கள் அனைத்தையும் முடித்து மண்டபத்தில் செல்ல தயாரான நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக மாடிப்படியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

அதனை அடுத்து ஆர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் ஆர்த்தி விழுந்ததில் அவரின் முதுகெழும்பில் பயங்கரமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சில மாதங்கள் படுத்தப் படுக்கையாக இருக்கதான் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


மேலும் காயங்கள் ஆறினால் தான் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியும் என்றும், முதுகெலும்பு சரியாகவில்லை என்றால் அவர் நிரந்தரமாகவே படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆர்த்தியின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆர்த்தியின் தங்கையை திருமணம் செய்து தருகிறோம், உங்களுக்கு சம்மதமா எனவும் ஆர்த்தியின் பெற்றோர் கேட்டுள்ளனர். இச்செய்தி மணமகனின் காதில் விழவே உடனே மருத்துவமனைக்கு சென்று ஆர்த்தியை பார்த்துள்ளார்.

அதன்பின் உடனடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது குறித்த அதே நேரத்தில் உறவினர்கள் முன்னிலையில் ஆர்த்தியை திருமணம் செய்துள்ளார் அவதேஷ். இது குறித்து அவதேஷ் கூறுகையில், எப்போது எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதோ அப்போதே ஆர்த்தியை நான் மனைவியாக ஏற்றுக்கொண்டு விட்டேன். அதனால் அவர் எந்த நிலைமையில் இருந்தாலும் அவர் தான் என் மனைவி என்று கூறியுள்ளார். இதனை கேட்டு ஆர்த்தியின் பெற்றோர் கண்ணீர் மல்க அவதேஷ்க்கு நன்றி கூறியுள்ளனர்.