இந்தியா

செல்போன் பிரச்சினை! உறவினரை கொலை செய்துவிட்டு சடலத்துடன் இளைஞர் செய்த மோசமான காரியம்! பகீர் சம்பவம்!

Summary:

boy take selfi with friend after kill

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் அலி மற்றும் ஜலாலுதீன். இருவரும் அன்சால் பகுதியில் உள்ள இறைச்சி கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அப்துல் அலி மற்றும் ஜலாலுதீனுக்கு  இடையே செல்போன் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அலி கோழியை அறுக்க கடைகளில் பயன்படுத்தும் கத்தியால் ஜலாலுதீனை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் தான் கொலை செய்த அந்த சடலத்துடன்,  பின்னணி இசை ஒலிக்க வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தனது நண்பர்களுக்கும் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து  தகவலறிந்து அலியை கைது செய்ய அங்கு போலீசார் விரைந்த நிலையில் அப்துல்அலி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனே அங்கு விரைந்து சென்று போலீசார் அலியை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்கு பிறகு அவர் தற்போது நலமாக உள்ளார். மேலும் அவர் முழுமையாக குணமடைந்ததும் போலிசாரால் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கிடையில் ஜலாலுதீன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 


Advertisement