கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை.. கன்னத்தில் அறைந்த கொடூரன்.. பகீர் சம்பவம்.!

கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை.. கன்னத்தில் அறைந்த கொடூரன்.. பகீர் சம்பவம்.!


boy-slapped-a-girl-in-private-bus

தனியார் பேருந்தில் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு கன்னத்தில் அறைந்த இளைஞர் குறித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருபுவனை பகுதியில் 20 வயதுடைய மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் முத்தியால்பேட்டை பாரதிதாசன் பெண்கள் கலைக் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில், தினமும் தனது கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

சம்பவ தினத்தன்று அவர் கல்லூரிக்கு சென்று தனியார் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அதே பேருந்தில் திருபுவனை அருகாமையிலுள்ள கொத்தபுரிநத்தம் பகுதியில் வசித்து வந்த நவீன் மற்றும் அவரது நண்பர்கள் ஹரி, பிரதாப், சாந்தகுமார் ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.

அப்போது அவர்கள் மாணவியிடம் ரகளையில் ஈடுபட்ட நிலையில், நவீன் தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை கன்னத்தில் பளாரென வேகமாக அறைந்துள்ளார். 

puducherry

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பேருந்திலிருந்து நவீனை இறக்கி விட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக மாணவி திருபுவனை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் நவீன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஓடும் பேருந்தில் காதலிக்குமாறு ஒரு இளைஞர் மாணவியை கொலை மிரட்டல் விடுத்து, கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.