இந்தியா காதல் – உறவுகள்

காதல்,கடத்தல் கல்யாணம் , 5 மாதத்தில் கழுத்தறுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட மாப்பிள்ளை, விசாரணையில் வெளிவந்த எதிர்பாராத திருப்பம்.!

Summary:

boy killed at 5 moths of marriage

திருமணமான 5 மாதத்தில் விஜீஸ் என்பவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது விஜீசைக் கொலை செய்தது நந்தன் என நபர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜீஸ் என்பவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணைக் காதலித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.  

இந்த நிலையில், சமீபத்தில் விஜீஸ் மதுபோதையில் தனது மனைவியின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி மற்றும் அவரது  மாமியார் நாகர்கோவிலில் உள்ள உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் தனியாக இருந்த விஜீசை பக்கத்து வீட்டு நண்பரான நெல்சன் என்பவர்  மது அருந்த அழைத்துள்ளார். பின்னர்  சிறிது தூரம் சென்று இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.மேலும் இவர்களுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்ததால் அதை மனதில் கொண்ட நெல்சன் , போதையில் இருந்த விஜீசின் கழுத்தை அறுத்து அங்கேயே புதருக்குள் போட்டு விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து உடலை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது நெல்சன் போலிசாரிடம் சிக்கியதையடுத்து நெல்சன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement