அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தகாத உறவை பாதியில் நிறுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருக்காட்டு கோணம் பகுதியை சேர்ந்தவர் சரிதா. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சரிதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த பினு என்ற நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சரிதா, பினுவுடனான தொடர்பை முறித்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு இரவு 8 மணி அளவில் சரிதாவின் வீட்டிற்கு சென்ற பினு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது திடீரென அவர் கொண்டு வந்த பெட்ரோலை சரிதாவின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் சரிதா மற்றும் பினு இருவரின் உடலிலும் தீப்பிடித்தது. இதில் பினு அருகிலுள்ள கிணற்றில் குறித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சரிதாவையும், பினுவையும் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பயங்கர தீக்காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை சரிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இதனை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.