பிறந்தநாள் கேக் வெட்ட ஆசையாக காத்திருந்த சிறுவனுக்கு நேர்ந்த அட்டூழியம்! இந்த கொடுமையை பார்த்தீர்களா!



birthday celebration atrocities

பிறந்தநாள் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் சந்தோசமான ஒரு நாளாகும். மேலும் அந்நாளில் அனைவரும் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவர்.மேலும் பலரும் தங்களது பிறந்தநாளை ஆண்டுதோறும் மிக ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் எனவும் ஆசைப்படுவர். இவ்வாறு கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்களது பரிசு மற்றும் வாழ்த்துக்களை பரிமாறி அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வர்.

ஆனால் காலங்கள் மாற மாற தற்போது நாகரீகம் என்ற பெயரில் பிறந்தநாளன்று பல அட்டூழியமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது. அதாவது ஸ்பிரே அடித்தல் மற்றும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என பல அநியாயங்களை நிகழ்த்தி வருகின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் அன்று மிகவும் ஆசையாக கேக் வெட்ட நினைத்துள்ளார். ஆனால் அப்பொழுது இளைஞர்கள் சிலர் முட்டையை ஊற்றி. கேக்கை சிறுவனின் முகத்தில் தேய்த்து அட்டூழியங்களை செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து விமர்சனம் செய்து வருகின்றனர் .