நீராவி எஞ்சினை அறுத்து, இரும்புக்கடைக்கு போட்ட இரயில்வே பணியாளர்கள்.. பலே சம்பவம்.!

நீராவி எஞ்சினை அறுத்து, இரும்புக்கடைக்கு போட்ட இரயில்வே பணியாளர்கள்.. பலே சம்பவம்.!



Bihar Purnia Railway Station Steam Engine Stolen by 7 Railway Employees

பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் இரயில்வே கூட்டத்தில், லோகோ டீசல் ஷெட் என்ஜினியராக பணியாற்றி வருபவர் ரஞ்சன். சமஸ்திபூர் கோட்டத்திற்கு சொந்தமான பூர்ணியா இரயில் நிலையத்தில், பழமையான நீராவி இரயில் எஞ்சின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 14 ஆம் தேதி இரயில் எஞ்சினை போலியான ஆவணம் தயார் செய்து, இரும்பு வியாபாரிக்கு எஞ்சினியர் ராஜிவ் ரஞ்சன் என்பவர் விற்பனை செய்தது உயர் அதிகாரிகளுக்கு தெரியவரவே, அதிகாரிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

சம்பவத்தன்று, பூர்ணியா இரயில் நிலைய பொறுப்பாளர் ரகுமான், பழைய நீராவி இரயில் எஞ்சின் எஞ்சினியர் ராஜிவ் ரஞ்சன் இரும்பு அறுக்கும் கருவியை பயன்படுத்தி இரயில் எஞ்சினை உடைத்துள்ளதை பார்த்து, ரகுமான் ராஜிவ் ரஞ்சனிடம் விசாரித்துள்ளார். அப்போது, எஞ்சினை உடைத்து பழைய ஷெட்டுக்கு அனுப்பும் ஆவணத்தை ராஜிவ் காண்பித்து இருக்கிறார். 

Bihar

இதனைக்கண்டு சந்தேகமடைந்த ரகுமான், இரயில் எஞ்சினை உடைக்க உத்தரவுகள் வந்துள்ளனவா? என சோதனை செய்த போது, அப்படியான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனால் மோசடி செயல் நடந்தது உறுதியாகவே, ராஜிவ் ரஞ்சன் உட்பட 6 பேர் தலைமறைவாகியுள்ளனர். 

இதனையடுத்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ராஜிவ் ரஞ்சன் உட்பட 7 பேரின் மீது புகார் அளித்துள்ள நிலையில், இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் 7 பேரையும் தேடி வருகின்றனர். எஞ்சினியர் ராஜிவ் ரஞ்சன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.