"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
#BigNews: மதிய உணவு சாப்பிட்ட 156 மாணவர்கள் வாந்தி, வயிற்றுவலியால் அவதி.. மருத்துவமனையில் அனுமதி..!
மாநில நாள் கொண்டாட்டத்தின் போது உணவு சாப்பிட்ட 156 மாணவர்கள் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 1912 ஆம் வருடம் மார்ச் மாதம் 22 ஆம் தேதி மேற்கு வங்கம் மாநிலத்தில் இருந்து பீகார் மாநிலம் ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் தனி மாநிலமாக பீகார் விளங்கியதை தொடர்ந்து, மார்ச் 22 ஆம் தேதி அம்மாநில அரசால் மாநில நாள் அனுசரிக்கப்படுகிறது.
மேலும், இந்த மாதத்தில் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஒரு வாரம் வரை அங்கு கொண்டாட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெறும். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரில் செயல்பட்டு வரும் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. பீகார் மாநில நாள் கொண்டாட்டத்தில் உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.
அப்போது, உணவுகளை சாப்பிட்ட மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலியின் காரணமாக அவதியடைந்துள்ளனர். இதனால் பதறிப்போன ஆசிரியர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கின்றனர். மொத்தமாக 156 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
156 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவுகளின் மாதிரியை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.