நடுரோட்டில் பயங்கர சண்டையில் காவலர்கள்; பாதுகாப்பு பணியின் போது சட்டையைப்பிடித்து சண்டை.!

நடுரோட்டில் பயங்கர சண்டையில் காவலர்கள்; பாதுகாப்பு பணியின் போது சட்டையைப்பிடித்து சண்டை.!


Bihar Nalanda 2 Cops Fight 

 

பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா, சோசராய் காவல் நிலைய அதிகாரிகள்  2 பேர், காவல் வாகனத்தில் அங்குள்ள பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, இருவருக்குள்ளும் தகராறு ஏற்படவே, காரை சாலையோரம் நிறுத்திய அதிகாரிகள், நடுரோட்டில் நின்று மாறி-மாறி தாக்கிக்கொண்டனர். 

இவர்களின் சண்டையை பொதுமக்கள் தடுத்தும் பலனில்லை. இருவரும் அவதூறான வார்த்தைகளை உபயோகம் செய்து கடுமையாக தாக்கிக்கொண்டனர். 

இந்த சம்பவத்தை தடுத்து பார்த்து பலனின்றி வீடியோ எடுத்த வழிப்போக்கர், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். வீடியோ வைரலானதை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

இருவரும் சண்டைக்கு பின்னர் தங்களின் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், வீடியோ வைரலானதால் பிற அதிகாரிகளுக்கும் உண்மை தெரியவந்துள்ளது.