திருமண ஊர்வலத்தை மிஞ்சிய இறுதி ஊர்வலம்! பாட்டியின் கடைசி ஆசையை பிரமாண்டமாக நிறைவேற்றிய 6 பேரன்கள்! பார்த்தா நீங்களே ஆடிப் போயிடுவீங்க.... வைரல் வீடியோ!!!
பிஹார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டம் ஷாபூர் பகுதியில், 95 வயதான கௌசல்யா தேவி மரணம் அடைந்தது கவனத்தை ஈர்த்துள்ளது. இறப்பதற்கு முன் தெரிவித்த அவரது ஒரு தனித்துவமான ஆசையே இப்போது நாடு முழுவதும் பேசப்படுகிறது. அந்த ஆசையை குடும்பத்தினர் பிரம்மாண்டமாக நிறைவேற்றிய விதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
80 ஆண்டுகளுக்கு முன் வந்ததைப் போலவே...
தகவலின்படி, கௌசல்யா தேவி தனது வாழ்க்கையின் இறுதி நேரத்தில், “நான் மருமகளாக இந்த வீட்டிற்கு வந்தபோது எவ்வளவு மேளதாளங்களுடன் வந்தேனோ, அதேபோலவே இந்த உலகை விட்டு செல்ல வேண்டும்” என்று தனது விருப்பத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்திருந்தார். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த வரவேற்பை நினைவுகூர்ந்த அவரது ஆசை, குடும்பத்தில் ஒரு உணர்ச்சி தருணமாக மாறியது.
24 மணி நேரத்தில் தயாரான பிரம்மாண்ட ஏற்பாடு
இதையடுத்து, அவரது 6 பேரன்கள் சேர்ந்து அந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர். வெறும் 24 மணி நேரத்திலேயே 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 3500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட இறுதி ஊர்வலம், ஒரு திருமண நிகழ்ச்சியைப் போலவே அமைந்தது. டிரோன் கேமராக்கள் மூலம் முழு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டது.
பாரம்பரிய நடனத்துடன் அனுப்பிய விடை
ஊர்வலத்தின் போது, பிஹாரில் பரவலாக காணப்படும் ‘லவுண்டா டான்ஸ்’ நடனமும் இடம்பெற்றது. இதனால், அந்த இறுதி நிகழ்வு இன்னும் வித்தியாசமாக அமைந்தது. வீடுகளின் மாடிகளில் நின்று மக்கள் இந்த நிகழ்வை பார்த்தனர். கடைசி ஆசை நிறைவேற்றப்பட்ட விதம் பலரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கரி மற்றும் குளிர்பான தொழிலில் ஈடுபட்டிருந்த பேரன்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பாட்டிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளனர். குடும்பத்தின் இந்த முயற்சி தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
बिहार में पोते ने दादी की अंतिम यात्रा में बना दिया माहौल, सात सौ गाड़ियां तीस से ज्यादा बैंड, दर्जनों लौंडा डांसर देख दंग रह गए लोग। pic.twitter.com/k2EHD6rv6P
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) April 26, 2026