பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இரண்டாவது முறை கொரோனா தொற்று உறுதி.!bihar cm affected by corona

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் மேலும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு இந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இந்த ஆண்டு ஜனவரியிலும், கொரோனா தொற்று உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.