பரபரப்பான தீர்ப்பு... "உடலுறவுக்கு கணவர் 'நோ' சொன்னால் குற்றமல்ல" - உயர்நீதிமன்ற தீர்ப்பு.!

பரபரப்பான தீர்ப்பு... "உடலுறவுக்கு கணவர் 'நோ' சொன்னால் குற்றமல்ல" - உயர்நீதிமன்ற தீர்ப்பு.!



bengaluru-high-court-release-a-important-judgement-im-a

திருமணத்திற்கு பின் உடலுறவு மறுத்ததாக  பெங்களூரைச் சார்ந்த பெண் ஒருவர் தன் கணவர் மீது பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

பெங்களூரைச் சார்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில நாட்களாகியும் அவரது கணவர் தொடர்ந்து உடலுறவிற்கு மறுத்து வந்திருக்கிறார். இதனால் திருமணமான 28 நாட்களில் தனது தாய் வீட்டிற்கு திரும்பிய பெண் கணவர் மீது கிரிமினல்  வழக்கை பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

karnataka

இது தொடர்பான விசாரணை நடைபெற்று பெங்களூர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்து சட்டப்படி கணவர் உடலுறவு மறப்பது கொடுமையானது என்றாலும் ஐபிசி 498ஏ பிரிவின் கீழ் அது குற்றமாகாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் தீர்ப்பு சமகாலங்களில் ஒரு முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.