ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பேருந்து நடத்துனர்..! விசாரணையில் அம்பலமான உண்மை..!

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பேருந்து நடத்துனர்..! விசாரணையில் அம்பலமான உண்மை..!



Bengaluru Bus Conductor Did Not Clear UPSC Mains Exam

பெங்களூரை சேர்ந்த பேருந்து நடத்துனர் ஒருவர் UPSC தேர்வு எழுதி முதற்கட்ட தேர்வில்  வெற்றிபெற்றுள்ளதாகவும், அடுத்ததாக நேர்முக தேர்வுக்கு தயாராகிவருவதாகவும் சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலானது.

வேலை பார்த்துக்கொண்டே படித்து, தேர்வு எழுதி ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றதற்காக சாதாரண மக்கள் முதல் பிராபலன்கள் வரை அந்த பேருந்து நடத்துனருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த செய்தி பொய் என்றும், அந்த நடத்துனர் ஏன் அப்படி பொய்யான தகவலை பரப்பினார் என்று தெரியவில்லை எனவும் அவரை பற்றி செய்தி வெளியிட்டிருந்த ஊடகம் ஓன்று தெரிவித்துள்ளதோடு, பொய்யான தகவலை கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்பதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Fact Check

அந்த ஊடகம் தெரிவித்துள்ள தகவலில் பெங்களூர் பேருந்து நடத்துனர் மது NC என்பவர் UPSC தேர்வில் முதல் சுற்றில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தினமும் 8 மணி நேரம் வேலைபார்த்து 5 மணிநேரம் தேர்வுக்காக படித்ததாகவும், தற்போது அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பதாகவும் கூறினார்.

மேலும், அவர் தங்களிடம் மது என்பவரின் பெயரில் உள்ள மதிப்பெண் பட்டியலையும் காண்பித்தார். ஆனால், தீவிர விசாரணைக்கு பிறகே அது அவருடைய மதிப்பெண் பட்டியல் இல்லை என்றும், மது குமாரி என்பவரின் மதிப்பெண் பட்டியல் எனவும் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

அந்த நடத்துனர் ஏன் பொய்யான தகவலை ஊடகத்திற்கு தெரிவித்தார் என தெரியவில்லை எனவும், அவரை பற்றிய அந்த தகவலை டெலிட் செய்துள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.