"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
அதிர்ச்சி சம்பவம்... பேரம் பேசுவதில் தகராறு... பயணியை அடித்து கொன்ற ஆட்டோ ஓட்டுநர்.!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆட்டோவிற்கு கூடுதல் கட்டணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பயணியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெங்களூரு காவல்துறை ஆட்டோ டிரைவரை கைது செய்துள்ளது.
வடமேற்கு பெங்களூருவில் உள்ள ஹெக்கனஹல்லி பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர் அஸ்வத்(27). நேற்று முன்தினம் இவரது ஆட்டோவில் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த இரண்டு சகோதரர்கள் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து யஸ்வந்த்பூர் ரயில் நிலையம் செல்வதற்காக ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஐந்து கிலோ மீட்டர் தூரமுள்ள இடத்திற்கு 100 ரூபாய் தருவதாக பேரம் பேசி இருக்கின்றனர்.
இந்நிலையில் ராஜாதி நகர் அருகே சென்றதும் நபர் ஒருவருக்கு 1500 ரூபாய் வீதம் 3000 ரூபாய் கொடுத்தால்தான் ஆட்டோவை எடுப்பேன் என பிரச்சனை செய்திருக்கிறார் ஆட்டோ டிரைவர். இது தொடர்பாக ஒடிசாவைச் சார்ந்த சகோதரர்களான ஆயோத் மற்றும் ஆயோப் ஆகியோர் ஆட்டோ டிரைவர் அஸ்வத்திடம் தகராறு செய்துள்ளனர். அவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருக்கிறது.
அப்போது ஆட்டோ டிரைவர் ஆயோதை மூர்க்கத்தனமாக தாக்கியதால் அவர் மயங்கி விழுந்துள்ளார். பயணி ஒருவர் ஆட்டோ டிரைவரால் தாக்கப்படுவதை கண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் மயங்கி விழுந்த ஒடிசாவைச் சார்ந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் . இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆட்டோ ஓட்டுனர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.