ஆத்தாடி..! திருப்பதிக்கே டஃப் கொடுத்த உண்டியல் வசூல்! எந்த கோவில் தெரியுமா.?

ஆத்தாடி..! திருப்பதிக்கே டஃப் கொடுத்த உண்டியல் வசூல்! எந்த கோவில் தெரியுமா.?


beat-thirupathi-hundiyal-collection

திருப்பதி ஏழுமலையான் பணக்கார சுவாமிகளில் ஒன்றாக கூறப்படுகிறது. திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். ஏழுமலையான் கோவிலுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பதற்கு இணங்க இக்கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து காணிக்கை செலுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா சமயத்திலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்திருந்த உண்டியல் வருவாய் தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. ரூ.2 கோடி வசூலாகி வந்த உண்டியல் வருவாய் தற்போது ரூ.3 கோடியை எட்டியுள்ளது. தற்போது திருப்பதியை விட அதிகமாக எண்ண முடியாத அளவிற்கு பணக்கட்டுகள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கார் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சன்வாலிய சேத் என்ற கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தைய தினத்தில் உண்டியல் பணத்தை எண்ணுவதை அந்த கோயிலின் நிர்வாகிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

undiyalஅந்த வகையில் சமீபத்தில் கோவில் உண்டியல் பணத்தை எண்ணியபோது கட்டுக்கட்டாக பணம் இருந்ததை பார்த்து நிர்வாகிகள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த கோவிலில் வழக்கமாக உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும் பனி ஒரு நாளில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. ஆனால் இந்தமுறை பணத்தை எண்ணும் பனி  இரண்டு நாட்கள் தொடர்ந்துள்ளது.

முதல் நாள் பணத்தை எண்ணும் பனியில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமாக பணம் இருந்ததாகவும் மேலும், தங்கம் வெள்ளியும் உண்டியலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரே மாதத்தில் திருப்பதி கோயிலை விட மிக அதிகமாக உண்டியல் பணம் வசூல் ஆன செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.