
தூதரகத்தில் இந்திய பெண்ணுடன் பாலியல் உரையாடல்.. வங்கதேச தூதரக அதிகாரிகள் சர்ச்சை செயல்.!
இந்திய பெண்ணுடன் பாலியல் உரையாடலில் ஈடுபட்டதாக வங்கதேச தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்தில் நாடு திரும்ப வங்கதேச வெளியுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்திய பெண்ணுடன் பாலியல் ரீதியாக உரையாடிய அதிகாரிகள், அவர்களின் நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா நகரில் வங்காளதேச துணை தூதரகம் உள்ள நிலையில், முதன்மை செயலாளராக முகமது சனியூல் காதற் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்திய பெண்ணுடன் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டு இருக்கிறார். முகநூல் மற்றும் வாட்சப் செயலியில் ஆபாச வீடியோ அனுப்பி இருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி தூதரகத்தில் புகார் அளிக்கவே, இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வங்காளதேச வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேசியதின் பேரில், வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் 2 பணியாளர்களை நாட்டிற்கு திருப்பி அழைத்துக்கொண்டது.
Advertisement
Advertisement