தொழில்போட்டியில் முன்னாள் பணியாளரால் நிர்வாக இயக்குனர், தலைமை செயல் அதிகாரி கொடூர கொலை; பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்.!



Bangalore Aeronics Internet Company CEO & MD killed by Ex Employee Felix 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் செயல்பட்டு வருகிறது Aeronics Internet நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக வினு குமார் பணியாற்றி வருகிறார். நிர்வாக இயக்குனராக பானின்ற சுப்ரமண்யா (Phanindra Subramaya) பணியாற்றி வருகிறார். 

இவர்கள் நிறுவனத்தில் பெலிக்ஸ் என்ற நபர் முன்னதாக வேலை பார்த்துவந்த நிலையில், அவர் சுயமாக புதிய நிறுவனத்தை தொடங்கி செயல்பட்டு வந்துள்ளார். இதனால் இருதரப்பு இடையே தொழில் போட்டி நிலவி வந்துள்ளது. பெலீக்சின் வளர்ச்சிக்கு சுப்ரமண்யா தடையாக இருந்துள்ளார். 

bangalore

இதனால் தனது முன்னாள் நிறுவனத்தின் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த பெலிக்ஸ், சம்பவத்தன்று 2 பேருடன் Aeronics Internet அலுவலகத்திற்கு சென்று தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோரை கொடூரமாக கொலை செய்து தப்பி சென்றுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அம்ருதஹள்ளி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு வலை வீசப்பட்டுள்ளது.