பாஜக பிரமுகர், அவரது தந்தை, சகோதரர் சுட்டுக்கொலை! கொலைசெய்தவர்கள் தீவிரவாதிகளா?

பாஜக பிரமுகர், அவரது தந்தை, சகோதரர் சுட்டுக்கொலை! கொலைசெய்தவர்கள் தீவிரவாதிகளா?


bajp leader and and his family mebers murdered

காஷ்மீரின் வடக்கு மாவட்டமான பந்திப்போராவைச் சேர்ந்த ஷேக் வாசிம் பாரி, இவர் பாஜக மாவட்ட தலைவராக உள்ளார். இவரது சகோதரர் உமர் சுல்தான் , தந்தை பஷீர் அகமது ஷேக். இவர்கள் அப்பகுதியில் கடை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்கள் மூவரும் கடையில் இருந்துள்ளனர்.

அந்த சமயத்தில் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், ஷேக் வாசிம் பாரி உட்பட 3 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலையாளிகள் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கின்றனர்.

வசீம் பாரிக்கு கொலை அச்சுறுத்தல் இருந்த நிலையில் அவருக்கு 10 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பில் இருந்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்த நேரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் வசீம் பாரியின் கடைக்கே அருகேயுள்ள அவரது வீட்டில் இருந்துள்ளனர். 

பாதுகாப்பு இல்லாத நேரம் பார்த்து இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், கடமை தவறிய 10 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.