குட்டி புலியின் சுட்டி செயல்.. மில்லியன் பேரின் கவனத்தை ஈர்த்த வைரல் வீடியோ.!

குட்டி புலியின் சுட்டி செயல்.. மில்லியன் பேரின் கவனத்தை ஈர்த்த வைரல் வீடியோ.!


Baby tiger play with mother

தாய் புலியிடம் அதன் குட்டி செய்யும் சேட்டை வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மில்லியன் கணக்கான பேர் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் குட்டி புலி தனது தாயுடன் கட்டிப்புரண்டு விளையாடும் வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளார். குட்டி புலி தனது தாயிடம் செய்யும் சேட்டைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து ரசிக்க வைத்து வருகிறது.

பொதுவாக தாயிடம் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கும். அதிலும் தனது தாயிடம் குட்டி விலங்குகள் செய்யும் சேட்டைகளை பார்க்கும் போது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.