விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அட்டூழியம்: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்..!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அட்டூழியம்: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்..!


Atrocity in Vinayagar Chaturthi procession 14-year-old girl gang-raped

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், எம்மிராஜுலா கண்ட்ரிகா பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் கலந்து கொண்டார். ஆனால் ஊர்வலம் முடிந்த பிறகு சிறுமி வீடு திரும்பவில்லை. இதன் பின்னர் சுமார் 3 மணி நேரம் கழித்து சிறுமி துணிகள் கிழிந்து உடலில் பல இடங்களில் ரத்தக்காயத்துடன் வீடு வந்து சேர்ந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது குறித்து கேட்டபோது தன்னை சிலர் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற அவரது பெற்றோர் கே.வி.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், ஊர்வலத்தில் 3 பேர் கும்பல் சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி அவரை ஆட்டோவில் தூக்கிபோட்டு கடத்திச்சென்றது தெரியவந்தது. இதன் பின்னர் மறைவான இடத்தில் வைத்து 3 பேரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு ஆட்டோவில் வீட்டின் அருகே சிறுமியை இறக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பலாத்காரம் செய்தவர்களில் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த குணா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.