காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து; மூன்று வீரர்கள் உயிரிழப்பு...!!

காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து; மூன்று வீரர்கள் உயிரிழப்பு...!!


Army vehicle overturned in Kashmir; Three soldiers lost their lives..

காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் அடர் மூடுபனி காணப்படுகிறது. டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கடும் மூடுபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலபிரதேசம் போன்ற மலைபிரதேச மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த கடுமையான பனிப்பொழிவிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து நாட்டுக்கு சேவையாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் மாச்சல் என்ற பகுதியில் இன்று ராணுவ வாகனத்தில் வழக்கமான ரோந்து பணிகளை ராணுவ வீரர்கள் மேற்கொண்டனர். ஒரு இளநிலை அதிகாரி உள்பட மூன்று ராணுவ வீரரகள் வாகனத்தில் பயணித்தனர். அவர்கள் சென்ற வாகனம், பனியில் சருக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. 

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த மூவரும் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் நைப் சுபேதார் பர்ஷோதம் குமார், ஹவில்தார் அம்ரிக் சிங் மற்றும் சிப்பாய் அமித் சர்மா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதே பகுதியில் இது போன்ற நிகழ்வு நடந்து இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில், மீண்டும் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.