டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அதிரடி முடிவு!

டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அதிரடி முடிவு!



Aravind kejirival ask army force

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்தநிலையில் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்ட  ஆதரவாளர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணிகள் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.

இதன்காரணமாக டெல்லியில் கடந்த சில நாட்களாக பதற்றமான  சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் நடந்த வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம்  கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லி காவல்துறையால் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நிலைமை மோசமாக மாறி உள்ளது. எனவே டெல்லியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்ப வேண்டும்.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்க வேண்டும். இது குறித்து உள்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன் என கூறியுள்ளார்.