இந்தியா டெக்னாலஜி

நாங்கள் யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை! வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம்! பேஸ்புக் நிறுவனம் விளக்கம்!

இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பா.ஜனதாவினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. அதேபோல் இந்தியாவில் முகநூல் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இந்நிலையில் இது குறித்து பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், முகநூல் எப்போதும் திறந்த வெளியாகவும், ஒளிவு மறைவின்றியும், எந்த அரசியல் சார்பின்றியும் செயல்படுகிறது. இதனால் முகநூலில் மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பதிவிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

எந்தவகையிலும் பேஸ்புக்கில் வெறுப்பு அதிகரிப்பதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனவும் அந்நிறுவனம் உறுதியளித்தது. நாங்கள் எங்கள் தளத்தில் பதிவிடப்படும் அனைத்தையும் தரம் கண்டு உறுதிப்படுத்துகிறோம். வன்முறையை தூண்டும் விதமாகவும், வெறுப்புணர்வு கொண்ட பதிவுகளை கண்டறிந்து அதை நாங்கள் நீக்கிவிடுகிறோம் என விளக்கமளித்தனர். 


Advertisement