இந்தியா

அவன் என் ஆளு டி.. கல்லூரி மாணவிகளிடையே நடுரோட்டில் சக்காளத்தி சண்டை..! வைரல் வீடியோ.!!

Summary:

அவன் என் ஆளு டி.. கல்லூரி மாணவிகளிடையே நடுரோட்டில் சக்காளத்தி சண்டை..! வைரல் வீடியோ.!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியை சார்ந்த இளைஞர், அங்குள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு தெரியாமல், மற்றொரு கல்லூரியில் பயின்று வரும் பெண்ணுடன் காதலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. 

சம்பவத்தன்று, காதலன் தனது ஒரு காதலியுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொஞ்சி குலாவிக்கொண்டு இருக்கவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு காதலி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, காதலனிடம் சென்று சண்டையிட்டுள்ளார். மற்றொரு காதலியோ இவன் எனது காதலன் என்று கூற, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் இருவரும் நடுரோட்டில் தலைமுடியை பிடித்து, அடித்து சக்காளத்தி சண்டையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுக்க, இருவரையும் விலக்கி விட முயற்சித்த காதலனோ, ஒருகட்டத்தில் அதனை கைவிட்டு ஓரமாக இருந்து வேடிக்கை பார்க்க தொடங்கினார். 

பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் மூவருக்கும் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 


Advertisement