ஒரே ஆட்டோவில் 12 பேர் பயணம்.. நீரோடையில் கவிழ்ந்தால் சோகம்..! 14 வயது சிறுமி பலி, 5 பேர் மாயம்.!

ஒரே ஆட்டோவில் 12 பேர் பயணம்.. நீரோடையில் கவிழ்ந்தால் சோகம்..! 14 வயது சிறுமி பலி, 5 பேர் மாயம்.!


Andra Pradesh Nellore Auto and Lorry Accident 14 Aged Girl Died 5 Missing on River

தந்தையின் இறுதிச்சடங்குக்கு சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கி, 14 வயது சிறுமியை இழந்துள்ளனர். மேலும், 5 பேரின் நிலை தெரியவில்லை. அவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் பகுதியை சார்ந்த 12 பேர், ஆட்டோவில் நேற்று இரவு பயணம் செய்துள்ளனர். இவர்கள் பயணித்த ஆட்டோ அங்குள்ள ஆத்மாகூரு நகரில் இருந்து சங்கம் பகுதி நோக்கி பயணம் செய்துள்ளது. 

இதன்போது, அவ்வழியாக செல்லும் பெண்ணாற்றின் பீரப்பேறு ஓடையின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் ஆட்டோ பயணம் செய்கையில், எதிர்திசையில் வந்த லாரி மீது மோதி ஓடைக்குள் ஆட்டோ விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இரவு 9.30 மணியளவில் நடந்துள்ளது. வாகனத்தில் இருந்த நபர்களில் 2 பேர் நீச்சல் அடித்து கரையேறிவிட, 4 பேர் ஆட்டோவை பிடித்தவாறு உயிருக்கு போராடியுள்ளனர். மேலும், 5 பேர் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் பாலத்திலேயே தவறி விழுந்துள்ளார். 

பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கயிறு கட்டி உயிருக்கு போராடிய நபர்களை மீட்டுள்ளனர். இவர்களில், ஆட்டோவை பிடித்தவாறு உயிருக்கு தத்தளித்த 14 வயது சிறுமி நாகவல்லி என்பவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Andra Pradesh

நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஆற்று நீரில் நீச்சலித்து உயிர்பிழைத்த நந்து என்பவர் கூறுகையில், எனது தந்தையின் இறுதிச்சடங்கை முடிக்க குடும்பத்துடன் அனைவரும் ஆட்டோவில் பயணம் செய்தோம். 

சங்கம் பகுதியில் உள்ள சிவன்கோவிலுக்கு சென்று இரவு தங்கிவிட்டு, மறுநாள் காலையில் இறுதிச்சடங்கு நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், ஆட்டோவில் பயணிக்கையில் விபத்தை சந்தித்துள்ளோம் என்று தெரிவித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த சமபவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.