கருப்பா பிறந்த நீ என் மகளா? - 18 மாத கைக்குழந்தையை கொலை செய்த கொடும்பாவி தந்தை.. பதறவைக்கும் சம்பவம்.!Andhra Pradesh Vijayawada Father Killed Own Daughter 

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா, பீட்சான்னேகண்ட்ல கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரின் மனைவி ஷ்ரவாணி. தம்பதிகளுக்கு அக்சயா என்ற 18 மாத கைக்குழந்தை இருக்கிறார். 

அக்சயா கருமையான நிறத்தில் பிறந்ததாக தெரியவருகிறது. இதனால் குழந்தையின் மீது வெறுப்பு கொண்ட மகேஷ், கடந்த 18 மாதமாக குழந்தையை பல வழிகளில் கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவரின் தாயால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி அக்சயா மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தவாறு வீட்டில் இருந்தார். அவரை மீட்ட குடுமப்த்தினர் மருத்துவமனையில் அனுமதித்தபோது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. பின் அவசர கதியில் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

குழந்தையின் மரணத்தில் சந்தேகம் கொண்ட ஷ்ரவாணியின் தாய், மகள் பறிபோன துயரத்தில் எதையும் கூறாமல் இருந்துள்ளார். பின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடந்த விசாரணையில் பகீர் தகவலும் அம்பலமானது. 

சிறுமி கருமையான நிறத்தில் பிறந்ததால் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தார் ஏளனமாக பேசி இருக்கின்றனர். பல முறை குழந்தையை கொலை செய்யவும் முயற்சித்துள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து குழந்தையை ஷர்வானி காப்பாற்றியபோதிலும் இறுதியில் அவரின் குழந்தை கணவரால் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமியின் தந்தை மகேஷை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.