அஜித்திற்கு நயன்தாரா கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி!
பயங்கரம்: பிரேக் பிடிக்காததால் பேருந்து நிலையத்திலேயே 3 பேர் பலி., பதைபதைப்பு வீடியோ வெளியானது.!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா, நெகலூர் பேருந்து நிலையத்தில், நேற்று விஜயவாடாவில் இருந்து குண்டூர் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டு செல்வதற்கு காத்திருந்தது.
அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கிய நிலையில், திடீரென பேருந்தின் பிரேக் பிடிக்காத காரணத்தால், நடைமேடையின் மீது பேருந்து பாய்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
విజయవాడ బస్టాండ్లో జరిగిన ప్రమాదం సీసీటీవీ ఫుటేజీ విడుదల
— Telugu Scribe (@TeluguScribe) November 7, 2023
విజయవాడ బస్ స్టేషన్లో నిన్న ఘోర ప్రమాదం జరిగిన విషయం తెలిసిందే. బస్సు ప్లాట్ ఫాం మీదకు దూసుకువచ్చిన సీసీ కెమెరా దృశ్యాలను ఆర్టీసీ అధికారులు విడుదల చేశారు. ఈ ఘటనలో గుంటూరు జిల్లా పెదనందిపాడు మం. రావిపాడుకు చెందిన ఆర్టీసీ… pic.twitter.com/bpW5kXW7Tb
இந்த சம்பவத்தில் பேருந்துக்கு முன்புறம் அமர்ந்திருந்த நடத்துனர் வீரய்யா, பெண், பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அங்கிருந்த பயணிகளில் சிலர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஓட்டுநர் பேருந்தை இயக்கியபோது, தறிகெட்டு நடந்த சோகம் அதில் பதிவாகியுள்ளது.