துப்பாக்கி சூட்டில், உயிரை விட்டு ராணுவ வீரர்களை காப்பாற்றிய பெண் நாய்.! 

துப்பாக்கி சூட்டில், உயிரை விட்டு ராணுவ வீரர்களை காப்பாற்றிய பெண் நாய்.! 


An Indian army dog saved soldiers

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கின்றனர் எனும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட துவங்கினர். அப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

indian army

இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்த நிலையில் ஒரு பயங்கரவாதி ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு தரப்பு சார்பில் நடந்த தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இதில் தப்பித்த மற்ற பயங்கரவாதிகளை படை வீரர்கள் துரத்திச் சென்றுள்ளனர்.

அப்போது, படைவீரர்களுக்கு முன்னால் கென்ட் என்ற ஆறு வயது லேபரடார் வகை சேர்ந்த பெண் மோப்ப நாய் சென்றுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டின் போது நாய் முன்னே பாய்ந்து தன் பாதுகாவலரை காக்கும் பொருட்டு குண்டை தன் மேல் வாங்கியது. 

indian army

இதில் கெண்ட் அதே இடத்தில் உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் பாதுகாக்கப்பட்டனர். உயிர் தியாகம் செய்து ராணுவ வீரர்களை காப்பாற்றிய அந்த நாய்க்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.