அம்ரித்சரில் தசரா பண்டிகை கொண்டாடிய 50-க்கும் மேற்பட்டோர் ரயிலில் நசுங்கி பலி! பரபரப்பு வீடியோ கட்சி!
அம்ரித்சரில் தசரா பண்டிகை கொண்டாடிய 50-க்கும் மேற்பட்டோர் ரயிலில் நசுங்கி பலி! பரபரப்பு வீடியோ கட்சி!

அம்ரிஸ்தர் இல் நடைபெற்ற துர்கா பூஜையில் 50க்கும் மேற்பட்ட விரைவு ரயிலில் நசுங்கி பலியாகினர்.
தசரா பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ராவணனின் சிலை எரிக்கப்படும். அவ்வாறு இன்று அம்ரிஸ்தரில் ராவணனின் சிலை எரிக்கப்பட்டது. 700க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் கூடி இதனை வேடிக்கை பார்த்தனர். அவர்கள் அருகில் இருந்த தண்டவாளத்தின் மீது நின்று வேடிக்கை பார்த்து வந்தனர்.
அப்போது ராவணனின் சிலையானது வாணவேடிக்கைகளுடன் மிகுந்த சத்தத்துடனும் எரிக்கப்பட்டது. இந்த சாதத்தில் அந்த வழியாக வந்த ரயிலை யாரும் கவனிக்கவில்லை. இதனால் வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது ஏறி சென்றது.
இந்த கோர சம்பவத்தில் தண்டவாளத்தின் மீது நின்றுகொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
Pch. #Amritsar God.. pic.twitter.com/c1IH0SMeFL
— Dr. K (@BlitzkriegKK) October 19, 2018
Sad And Tragic Accident At #Amritsar
— ☬ SINGH ਸਿੰਘ ☬ 🇮🇳 (@HatindersinghR) October 19, 2018
May Waheguruji BLESS The Souls Of Those Who Died In Peace And Bless Families To Bear The Pain....
#AmritsarTrainAccident pic.twitter.com/phKf5Maii9