இவ்வளவு கிளாமர் கூடாது..ங்க.! "சார்பட்டா பரம்பரை" 'மாரியம்மா' வின் ஹாட் க்ளிக்ஸ்.!
ஒரே நாளில் அடித்த ஜாக்பாட்.!! வெறும் 270 ரூபாயால் கோடீஸ்வரராக மாறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.!
லாட்டரி சீட்டு பல இடங்களில் தடை செய்யப்பட்டிருந்தாலும், சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாங்கிய 270 ரூபாய் லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் உள்ள கிழக்கு பார்தமன் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் ஹீரா என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சமீபத்தில் 270 ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது அந்த லாட்டரி டிக்கெட் மூலம், இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதனையடுத்து வர் உடனடியாக தன்னுடைய லாட்டரி டிக்கெட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, காவல்நிலையத்திற்கு சென்று இது குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் , அவரது தாயார் கடுமையான நோயால் அவதிப்பட்டு வருவதால் லாட்டரியில் கிடைக்கும் பணத்தை வைத்து, அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளார். பின்னர் புதிய வீடு ஒன்றை கட்ட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.